TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 8 , 2020 1506 days 609 0
  • தமிழ்நாடு மாநிலத் தலைமைச் செயலாளரான K. சண்முகத்தின் பதவிக் காலமானது அடுத்த 3 மாதத்திற்கு, அதாவது அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
    • மத்திய அரசனாது இந்தப் பதவி நீட்டிப்பிற்கான தனது ஒப்புதல் குறித்து மாநில அரசிடம் கூறியுள்ளது.
  • சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலமானது ஸ்பந்தன் என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
    • இந்தப் பிரச்சாரமானது காவல் துறையினரிடையே சகோதரச் சண்டை மற்றும் தற்கொலை ஆகியவற்றைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் வனப் பரப்பை அதிகரிப்பதற்காக “Thank Mom” (நன்றி அன்னை) என்று பெயரிடப்பட்ட ஒரு மரம் நடும் இயக்கமானது தொடங்கப் பட்டுள்ளது.
  • கிருஷ்னேந்து மஜும்தர் என்பவர் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை நிறுவனத்தின் (BAFTA - British Academy of Film and Television Arts) புதிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
    • BAFTAயின் 73 ஆண்டு கால வரலாற்றில் புகழ்பெற்ற இப்பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது உலகளாவிய இந்தியர் இவராவார்.
  • தமிழ்நாடு நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 1999 ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பிரஜேந்திர நவநீத் என்பவரை உலக வர்த்தக அமைப்பின் இந்தியாவிற்கான புதிய தூதராக இந்தியா நியமித்துள்ளது.
    • பிரதமர் தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது குஜராத் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த 1996 ஆம் ஆண்டு IAS அதிகாரியான ராஜீவ் தப்னோ என்பவரை அடுத்த 3 ஆண்டுக் காலத்திற்கு உலக வங்கியின் செயல் இயக்குநருக்கான ஒரு மூத்த ஆலோசகராக நியமித்துள்ளது.
  • கூகுள் நிறுவனமானது “சோடர்” என்ற ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது.
    • இது நோய்த் தொற்று உள்ள ஒரு நபர் அந்தச் செயலியின் பயனாளியை நெருங்கும் போது, அப்பயனாளிக்கு அது குறித்த தகவலைத் தெரிவிக்கும்.
  • ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநரான கிரிஷ் சந்திரா முர்மு “மேரா வெட்டன்” என்ற பெயரில் ஜம்மு காஷ்மீர் மாநிலப் பணியாளர்களின் ஊதியக் கண்காணிப்பு குறித்த கைபேசிச் செயலியைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • உலகப் பூச்சி தினமானது பூச்சி மேலாண்மையானது எவ்வாறு வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க உதவும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 06 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • இந்தத் தினமானது சீனப் பூச்சிக் கட்டுப்பாட்டு மன்றத்தினால் தொடங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்