TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 15 , 2020 1499 days 634 0
  • தமிழ்நாடு முதல்வரான எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் 7.87 கிலோ மீட்டர் நீளமுடைய ஈரடுக்கு கொண்ட ஒரு மேம்பாலத்தைத் திறந்து வைத்தார். இது இம்மாநிலத்தின் மிக நீண்ட மேம்பாலமாக விளங்குகின்றது.
    • இந்த மேம்பாலம் ‘புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா ஈரடுக்கு மேம்பாலம்’ என அழைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
  • தமிழ்நாடு மாநில அரசானது தமிழ்நாடு முழுவதும் உள்ள 1018 சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்களின் பெயரை, அவற்றின் தமிழ் உச்சரிப்பிற்கு ஏற்றவாறு மாற்றிப் பெயரிட்டுள்ளது. 
    • இது தமிழ்நாடு அரசின் மாநிலத் தமிழ் அலுவல் மொழி, தமிழகக் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
  • மத்திய உள்துறை அமைச்சகமானது சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலன்களை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்றினைத் திரும்பவும் மாற்றியமைத்துள்ளது.
    • இது மத்திய உள்துறை இணையமைச்சரான G. கிஷன் ரெட்டி என்பவரைத் தலைவராகக் கொண்டும், நாடு முழுவதிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரர்களை அதன் உறுப்பினர்களாகக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.
  • கழிவு மேலாண்மையில் தலைசிறந்து விளங்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனமான “ரெசிக்கல்” என்ற நிறுவனமானது நீடித்த நெகிழிக் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் இந்துஸ்தான் கோகோ-கோலா குளிர்பான நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்துள்ளது.
    • இது இந்திய அளவிலான பங்களிப்பாக “பிரித்திவி திட்டம்”  என்று அழைக்கப் படுகின்றது.
  • கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விண்வெளி வல்லுநரான ரஞ்சித் குமார் என்பவருக்கு நாசாவின் புகழ்பெற்ற சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
    • இது நாசாவின் சேவை விருதைப் போன்றே ஆனால் அரசு சாராத வல்லுநர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்