TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 16 , 2020 1498 days 714 0
  • மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் தேசியக் கூட்டுறவு வளர்ச்சி ஒத்துழைப்பினால் தொடங்கப்பட்ட ஒரு முன்னெடுப்பான “சஹாக்கர் பித்ரா : உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம்” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • இந்தத் திட்டமானது இளம் தொழில் நிபுணர்களின் புத்தாக்கக் கருத்துகளை அணுக வேண்டி கூட்டுறவு நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையமானது மருத்துவக் காப்பீட்டுக் கொள்கைகளின் கீழ் தொலைதூர முறையிலான மருத்துவத்தைச் சேர்ப்பதற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் 800 மீ ஓட்டப்பந்தய வீரரான கோமதி மாரிமுத்து என்பவருக்கு, ஊக்க மருந்து உட்கொண்டதற்காக 4 ஆண்டுக் காலத்திற்கு தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
    • கடந்த ஆண்டில் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் வென்ற தங்கப் பதக்கம் இவரிடமிருந்துப் பறிக்கப்பட இருக்கின்றது.
  • இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதலாவது உள்கட்டமைப்புத் துறை அமைப்பாக உருவெடுத்து உள்ளது.
    • இது தரவு தளம் (Data Lake) மற்றும் திட்ட மேலாண்மை என்ற மென்பொருளின் மூலம் முழுமையாக நிகழ்நேரத் தளத்திற்கு மாறியுள்ளது.
  • சமீபத்தில் இமாச்சலப் பிரதேச மாநில முதல்வரான ஜெய் ராம் தாக்கூர் அம்மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் உள்ள மூத்தக் குடிமக்களுக்காக வேண்டி பஞ்சவதி யோஜனா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
    • இந்தத் திட்டமானது மூத்தக் குடிமக்கள், அவர்களது ஓய்வு நேரங்களில் தோட்டங்கள் மற்றும் பூங்காக்களில் செலவிட உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில் ஆந்திரப்பிரதேச மாநில முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி “ஜெகனன்னா செடோடூ” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
    • இந்தத் திட்டமானது முடி திருத்துபவர்கள், தையல்காரர்கள், சலவை செய்பவர்கள் ஆகியோருக்கு ரூ.1000 நிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மின்னணு வணிக நிறுவனமான அமேசான் நிறுவனமானது காவல் துறையினால் பயன்படுத்தப்படும் “Rekognition” என்ற தனது மென்பொருள் பயன்பாட்டிற்குத் தடை விதித்துள்ளது.
    • இந்த மென்பொருளானது காவல்துறையின் தரவு தளங்களில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான புகைப்படங்களை விரைவாக ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்தப் படுகின்றது.
  • முதலாவது இந்தியக் காட்டெருமைக் கணக்கெடுப்பானது (Indian Bison) பிப்ரவரி மாதத்தில் நீலகிரி வனப்பகுதியில் மேற்கொள்ளப் பட்டது.
    • இந்தக் கணக்கெடுப்பில் 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 2000 இந்தியக் காட்டெருமைகள் வசிப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்