கிராண்ட் மாஸ்டரான P. ஹரிகிருஷ்ணா என்பவர் 1,50,000 அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட சதுரங்க மாஸ்டர்களைக் கொண்ட குழுவில் இணையும் முதலாவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில அரசானது தொழிற்துறைகளுக்கான புதிய முதலீடுகளைக் கவர்வதற்காக வேண்டி “மகா பர்வானர்” என்ற திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.
நாசாவானது வாஷிங்டன் டி.சியில் உள்ள தனது தலைமையகக் கட்டிடத்திற்கு அதன் முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் பொறியாளரான மேரி W. ஜாக்சன் என்பவரது பெயரை வைத்துள்ளது.
வினி மகாஜன் என்பவர் பஞ்சாப் மாநிலத்தின் முதலாவது பெண் தலைமைச் செயலாளராக உருவெடுத்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் விண்வெளி நடைபயணத்திற்காக வேண்டி முதலாவது சுற்றுலாப் பயணியை விண்வெளிக்குக் கொண்டு செல்ல இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஐரோப்பியக் கால்பந்து விளையாட்டுப் போட்டியில், லிவர் பூல் அணியானது முதன்முறையாக 2019/20 ஆண்டுப் பதிப்பின் ஆங்கிலப் பீரிமியர் லீக் பட்டத்தை வென்றுள்ளது.