TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 29 , 2020 1485 days 643 0
  • பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமானது, உள்நாட்டிலேயே மேம்படுத்தப் பட்ட விமான வானிலைக் கண்காணிப்பு அமைப்பை (Aviation Weather Monitoring System) பெறும் இந்தியாவின் முதல் விமான நிலையமாக திகழ்கிறது. 
  • உலகின் மிகப்பெரிய தேர்த் திருவிழா யாத்திரையானது ஒடிசாவின் கடற்கரை மாவட்டமான பூரி எனும் மாவட்டத்தில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் நடைபெற்றது. 
  • இன்போசிஸ்  நிறுவனம்  2040 ஆம் ஆண்டிற்குள் நிகர-சுழிய கார்பன் நிலையை அடைய அமேசான் மற்றும் குளோபல் ஆப்டிமிஸம் ஆகிய நிறுவனங்களுடன்  காலநிலை உறுதிமொழியில் கையெழுத்திட்ட முதல் இந்திய நிறுவனமாக மாறியது. 
  • இந்திய ரயில்வேயின் மத்திய ரயில்வே மண்டலமானது தன்னியக்க பயணச் சீட்டுச் சரிபார்ப்பு மற்றும் நிர்வாக அணுகல் (Automated Ticket Checking & Managing Access) இயந்திரத்தை  நாக்பூர் ரயில் நிலையத்தில் நிறுவியுள்ளது. 
  • HDFC எர்கோ மற்றும் ஐக்கியப் பேரரசைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ட்ரோபோகோ ஆகிய இரண்டும் கூட்டாக ‘பறக்கும் போது பணம் செலுத்துங்கள்’ (pay as you fly) எனும் இந்தியாவின் முதல் ஆளில்லா விமானங்களுக்கான காப்பீட்டை அறிமுகப் படுத்தியுள்ளன. 
  • 2020 ஆம் ஆண்டில், பசுமை மிசோரம் தினமானது ஜூன் 11 அன்று இந்தியாவில் மிசோரம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப் பட்டது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்