TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 4 , 2020 1480 days 705 0
  • எச்டிஎப்சி வங்கியானது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக “மின்னணு கிசான் தன்” என்ற செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • பௌதே லகோவ், பார்யவர்ன் பச்சோவ்” (மரங்களை நடுங்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடுங்கள்) என்று அழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய மரம் நடும் இயக்கமானது தில்லி அரசினால் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையானது தற்பொழுது கணிசமாகக் குறைந்துள்ளது. இது 2018-19 ஆம் ஆண்டில் 53.56 பில்லியனிலிருந்து 2019-20ல் 48.66 பில்லியன் ஆகக் குறைந்துள்ளது.
  • செயற்கை நுண்ணறிவு குறித்த உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றான “CogX” ஆனது ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் நடைபெறுகின்றது.
    • இந்தியாவின் செயற்கை நுண்ணறிவினால் செயல்படுத்தப்படும் My Gov கொரானா உதவி மையம்” ஆனது 4வது CogX நிகழ்வில் “கோவிட் – 19ற்கான சிறந்தப் புத்தாக்கம் – சமூகம்” மற்றும் “மக்கள் விருப்பம் கோவிட் – 19 ஒட்டு மொத்த வெற்றியாளர்” என்ற பிரிவுகளின் கீழ் 2 விருதுகளை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்