TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 10 , 2020 1474 days 654 0
  • உலக வங்கி மற்றும் இந்திய அரசு ஆகியவை கங்கை நதியைப் புனரமைக்க முயற்சி செய்யும் நமாமி கங்கைத் திட்டத்திற்காக வேண்டி உதவிக்கான கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • 116 நாட்களுக்குப் பிறகு ஜூலை 08 அன்று சர்வதேச கிரிக்கெட் ஆனது மீண்டும் தொடங்கியது. இது இங்கிலாந்தில் இங்கிலாந்து (எதிர்) மேற்கு இந்தியத் தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியுடன் தொடங்கியது.
  • சிரியா மற்றும் ரஷ்ய விமானங்கள் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகள் மீது மிகத் தீவிர விமானப் படைத் தாக்குதல்களை நடத்தின.
  • பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் உலக வாரம் 2020 என்ற நிகழ்வின் தொடக்கத்தைக் குறிப்பதற்காக வேண்டி உலகளாவிய பார்வையாளர்களிடையே உரையாற்றினார்.
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது அம்மாநிலத்தின் 14வது முதல்வரான YS ராஜசேகர ரெட்டியின் 71வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக வேண்டி ரைத்து தினோத்சுவம் (விவசாயிகள் தினம்) என்ற ஒன்றைக் கொண்டாடியது.
  • ஜெயந்த் கிருஷ்ணா என்பவர் ஐக்கிய இராஜ்ஜிய மற்றும் இந்திய வர்த்தக ஆணையத்தில் இந்தியாவைச் சேர்ந்த முதலாவது தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • தேசியத் திறன் வளர்ச்சிக் கழகமானது நாட்டில் உள்ள இளைஞர்களின் எண்ணிலக்கம் அல்லது டிஜிட்டல் திறனை மேம்படுத்துவதற்காக மைக்ரோசாப்ட் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
  • முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் பாடப் பிரிவின் படிப்புக் காலமானது அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி ஆணையத்தினால் 3 ஆண்டுகளிலிருந்து 2 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • தமிழறிஞரும் புகழ்பெற்ற கவிஞரான பாரதிதாசனின் மகனுமான மன்னர் மன்னன் சமீபத்தில் புதுச்சேரியில் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்