பருவநிலை மாற்றம் மீதான ஐ.நா.வின் கட்டமைப்பு ஒப்பந்தத்தினுடைய ( UNFCCC - United National Framework on Climate Change) உறுப்பு நாடுகளின் 23-வது மாநாடு (Conference of Parties – COP 23) ஜெர்மனியின் பான் (Bonn) நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கான இந்திய அமர்வை (Indian Pavilion) மத்திய சுற்றுச்சூழல், வளம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். COP 23 க்கான இந்தியாவின் கருத்துரு “எதிர்காலத்தை பாதுகாக்க தற்போதே பாதுகாத்தல்”. [Conserving Now, Preserving future] என்பதாகும்.