இந்திய இராணுவமானது விரைவுக் கொள்முதல் வகை திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடமிருந்து சிக் 716தாக்குதல் ரக துப்பாக்கிகளை 72,000என்ற அளவில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
சட்டம் மற்றும் நீதிக் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரெஸ் செபஸ்டின் டூடா என்பவர் போலந்தின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புத் துறை ஆயுதக் கொள்முதல் ஆணையமானது ராவென் என்ற தொலைதூரத்திலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு ஆளில்லா வான்வெளி வகை வாகனத்தை அமெரிக்காவிடமிருந்தும் ஸ்பைக் பைர்ப்ளை என்ற ஒரு வகை வாகனத்தை இஸ்ரேலிடமிருந்தும் வாங்க இருக்கின்றது.