TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 18 , 2020 1466 days 714 0
  • மகாராஷ்டிரா மாநில அரசானது நாசிக் மாவட்டத்தில் யோலா எனும் இடத்தில் தளபதி தாந்தியா தோப்பின் தேசிய நினைவுச் சின்னம் ஒன்றைக் கட்டமைத்து வருகின்றது.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது பிஎஸ்எப், சிஆர்பிஎப், என்எஸ்ஜி, ஐடிபிபி உள்ளிட்ட துணை இராணுவப் படைகளின் பணியாளர் மற்றும் முன்னாள் பணியாளர்களுக்கு முகநூல் பயன்பாட்டைத் தடை செய்துள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய இளைஞரான சோகம் முகர்ஜி என்பவர் துள்ளல் நடைப் பிரிவில் கின்னஸ் உலக சாதனைப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • கொச்சின் துறைமுகத்தின் வல்லார்பாடம் முனையமானது இந்தியாவின் முதலாவது இடைமாற்று கப்பல் துறைமுகமாக உருவெடுத்துள்ளது.
  • இந்திய இரயில்வேயானது அடுத்த 3.5 ஆண்டுகளில் 100 சதவீதம் முழுமையாக மின்சார மயமாக்கப்பட இருக்கின்றது.
  • தில்லி மற்றும் மகாராஷ்டிராவிற்குப் பின்பு பிளாஸ்மா வங்கி வசதியைப் பெற்ற மூன்றாவது மாநிலமாக ஒடிசா உருவெடுத்துள்ளது.
  • மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சரான ஸ்ரீபத் நாயக் புதுதில்லியில் ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் என்ற கருப்பொருளின் கீழ் விண்வெளி மற்றும் பாதுகாப்புப் பொருள் உற்பத்தித் தொழில்நுட்பம் குறித்த ஒரு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
  • யுனிசெப் இந்தியாவானது வேலைவாய்ப்பிற்குத் தேவையான டிஜிட்டல் கல்வி மற்றும் திறன்களை அளிப்பதற்காக Yuwaah-UNICEF-ன் (United Nations Children's Fund) ஜெனரேஷன் அன்லிமிடெட் என்ற ஒரு முன்னெடுப்புடன் இணைந்துள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய வணிக ரீதியிலான கப்பல் கட்டும் நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனமானது நார்வேயில் உள்ள “ASKS” கடல்சார் நிறுவனத்திற்காக உலகின் முதலாவது முழுவதும் தானியங்கி மின்சாரக் கப்பலைக் கட்டமைப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்