TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 22 , 2020 1462 days 664 0
  • கூகுள் வலை தளமானது தனது சமூக வலைதளமான கூகுள்+ என்பதனை “கூகுள் கரண்ட்ஸ்என்ற ஒன்றாக பெயர் மாற்றி மீண்டும் தொடங்கியுள்ளது.
  • மின்சாரக் கம்பிகள் மற்றும் மின்செலுத்துக் கோபுரங்களை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா குட்டி விமானங்களைப் பயன்படுத்தும் நாட்டின் முதலாவது மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • மத்திய உணவுப் பதப்படுத்தல் தொழிற்துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் மிசோரம் மாநிலத்தின் முதலாவது மிகப்பெரிய உணவுப் பூங்காவான - சோரம் மிகப்பெரிய உணவுப் பூங்காவைத் திறந்து வைத்துள்ளார்.
  • இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான டோம் சிப்வே என்பவர் சர்வதேசக் கிரிக்கெட் ஆணையத்தினால் விதிக்கப்பட்டஉமிழ்நீர் மீதான தடையைமீறிய முதலாவது நபராக உருவெடுத்துள்ளார்.
  • ஜம்மு காஷ்மீர் நிர்வாகமானது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் ஆகிய நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ. 25 இலட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • 1956 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் பேலோன் டிஓர் பிரான்சு கால்பந்து விருதானது தற்பொழுது வரலாற்றில் முதல்முறையாக 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட மாட்டாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்