TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 26 , 2020 1458 days 606 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்றின் போது முன்களத்தில் நின்று அயராது பணியாற்றியதற்காக சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செவிலியரான கலா நாராயணசாமி என்பவருக்கு செவிலியர்களுக்கான சிங்கப்பூர் ஜனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
  • தில்லியைத் தொடர்ந்து இந்தியாவின் இரண்டாவது தேசிய அளவிலான பிளாஸ்மா வங்கியானது சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் திறக்கப் பட்டுள்ளது.
  • தினசரி வாழ்வில் அனல்மின் பொறியாளர்களின் பங்களிப்பை அனுசரிப்பதற்காக தேசிய அனல்மின் பொறியாளர் தினமானது ஜூலை 24 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
  • அகி இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமானது (எய்ம்ஸ்) “கோவேக்சின்” என்ற நாட்டின் முதலாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தின் முதலாவது மருந்தைச் சோதனைக்கு வேண்டி செலுத்தியுள்ளது.
  • கோவிட் – 19 நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது தீபக் B பதக் என்பவரின் தலைமையின் கீழ் “விரைவு எதிர்வினைக் குறிமுறையின் ஆய்விற்கான குழுவின் அறிக்கையை” வெளியிட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்