TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 29 , 2020 1455 days 553 0
  • இந்தியாவின் நிதியியல் நடவடிக்கை பணிக் குழு மீதான மறு ஆய்வானது (FATF - Financial Action Task Force) 2021 ஆம் ஆண்டிற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் வழக்கமான மறு ஆய்வு சுழற்சியின் ஒரு பகுதியாக இந்த மறு ஆய்வானது இந்த ஆண்டில் பட்டியலிடப் பட்டிருந்தது.

  • அமெரிக்காவின் ஹவுஸ்டனில் உள்ள சீனத் தூதரகம் மூடப்பட்டதற்கு எதிர்வினையாற்றும் விதமாக சீனாவின் செங்குடு நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகமானது மூடப் பட்டது.

  • மத்தியப் பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகமானது இந்தியக் கணக்கியல் நிலைகளைத் திருத்தியுள்ளது.

  • இந்தியா மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்திற்கிடையேயான 14வது கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழு – 2020 என்ற சந்திப்பானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக முதன்முறையாக காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.

  • மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகரான ஜெய்சங்கர் அவர்களால் “இந்தியாவின் வழி : நிச்சயமற்ற உலகத்திற்கான உத்திகள்” என்ற புத்தகமானது எழுதப் பட்டது.

  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான விரால் V. ஆச்சாரியா அவர்களால் “இந்தியாவில் நிதியியல் நிலைத் தன்மையை மீட்டெடுப்பதற்கான வழிகளை ஆராய்தல்” என்ற புத்தகமானது எழுதப் பட்டது.

  • உலக சுகாதார நிறுவனத்திடமிருந்துப் பெறப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து வட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசிற்கு இந்தியாவானது 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மருத்துவ நிதியுதவியை அளித்துள்ளது.

    • இது அந்நாட்டிற்கு காசநோய் எதிர்ப்பு மருந்துகள் என்ற அடிப்படையில் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்