TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 30 , 2020 1454 days 701 0
  •  
  •  
  • நமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த நடைமுறைகள் குறித்து ஒரு விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலகப் பாதுகாப்புத் தினமானது சர்வதேச அளவில் ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டமானது ஈஷா அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபைக்கான பார்வையாளர் அந்தஸ்தை வழங்கியுள்ளது.
  • சமீபத்தில் ஹன்னா சூறாவளிப் புயலானது (ஹரிக்கேன்) அமெரிக்காவின் டெக்சாசிற்கு அருகில் கரையைக் கடந்தது.
  • கெயில் (இந்தியா) நிறுவனம் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் தூய கரிமத் தீர்வுகள் நிறுவனம் ஆகியவை இந்தியாவில் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மதிப்புக் கூட்டு சங்கிலித் தொடரில் (Compressed Biogas value chain) உள்ள திட்ட மேம்பாட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்திய இரயில்வேயானது குறிப்பாக வடிவமைக்கப்பட்ட 10 அகல இரயில் பாதை டீசல் இயந்திரங்களை வங்க தேசத்திற்கு வழங்கியுள்ளது.
  • மத்திய அரசானது உலக வங்கியுடன் இணைந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியர்-சம்பல் தொடர் பகுதியில் உள்ள இடுக்கு வழிகளை (Ravine) விவசாயச் சாகுபடிக்கு ஏற்ற ஒரு பகுதியாக மாற்ற முடிவு செய்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரான அண்டோனியோ குட்டேரஸ் 7 உறுப்பினர்களைக் கொண்ட தனது காலநிலை மாற்றம் குறித்த புதிய இளையோர் ஆலோசனைக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான அர்ச்சுனா சோரங் என்பவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
  • சர்வதேச சூரிய ஒளி சக்திக் கூட்டமைப்பின் கீழ், தேசிய அனல் மின் கழகமானது இலங்கையில் சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.
  •  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்