TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 2 , 2020 1451 days 589 0
  • 2019-20 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெரும்பான்மையான அளவில் பெறும் புலம்பெயர்ந்தோர் இந்தியர்கள் ஆவர்.

  • இந்திய நிதி உதவியுடன், மொரீஷியஸ் நாட்டில் போர்ட் லூயிஸில் கட்டப்பட்ட புதிய உச்ச நீதிமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாத் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

  • ஏர் இந்தியாவில் 100% அந்நிய நேரடி முதலீட்டை மேற்கொள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது.

  • ஸ்பெயினில் உள்ள சபிக் பன்னாட்டு ரசாயன உற்பத்தி நிறுவனத்தின் பாலிகார்பனேட் பிரிவானது, புதுப்பிக்கத்தக்க சக்தியில் முழுமையாக இயங்கும் உலகின் முதல் பெரிய அளவிலான தொழிலகமாக உருவெடுத்து உள்ளது.

  • நோயாளியால் வெளியிடப்படும் நோய்த் தொற்றுகள் பரவுதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்காக வேண்டி மருத்துவ ரீதியில் தனிமைப்படுத்தும் அமைப்பான ‘ஆஷ்ரே’ என்ற அமைப்பை ராணுவத்தின் மேம்பட்ட தொழில்நுட்ப நிறுவனமானது உருவாக்கியுள்ளது.

  • ஈரானின் புரட்சிகர இஸ்லாமிய பாதுகாப்புக் காவல்படை ‘சிறந்த நபி 14’ என்ற இராணுவப் பயிற்சியின் போது நிலத்தடியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகை (உந்துவிசைக்குரிய) ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்