TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 6 , 2020 1482 days 640 0
  • மறைமுக வழியில் பரவும் கோவிட் – 19 நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு வேண்டி பயணிகளின் பயண உடைமைகளை கிருமி நீக்கம் செய்வதற்காக பெங்களுரூ இரயில் நிலையத்தில் “UV உடைமை முழுக்குஎன்ற வசதியானது தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
  • டாமன் நிர்வாகத்தின் கல்வித் துறையானது இணையக் கல்வியின் மூலம் டிஎன்எச் மற்றும் டிடி (Dadra and Nagar Haveli and Daman and Diu ) ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காக வேண்டி இ-கியான் மித்ரா (E-Gyan Mitra) என்ற செயலியைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவிற்கான பிரிட்டனின் உயர் ஆணையரான பிலிப் பார்ட்டன் என்பவர் புதிதாக இணைக்கப்பட்ட அயல்நாடு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் நிரந்தர கீழ்நிலைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் ஸ்குவாஷ் கூட்டமைப்பானது மலேசியாவின் கோலாலம்பூரில் நடத்தப்பட இருக்கும் 2020 ஆம் ஆண்டின் மகளிர் உலக அணி ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பிலிருந்து வெளியேறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்