TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 13 , 2020 1474 days 670 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் அவர்கள் இணைத்தல், தொடர்பு கொள்ளுதல், மாற்றம் ஏற்படுத்துதல்” (Connecting, Communicating, Changing) என்ற தலைப்பு கொண்ட ஒரு புத்தகத்தை புது தில்லியில் வெளியிட்டுள்ளார்.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர், ஹைதராபாத்தில் உள்ள பாரத் டயனமிக்ஸ் நிறுவனத்தில் ஏவுகணை இருப்பு வசதி மற்றும் போர் ஆயுத உற்பத்தி அலகு ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
  • லெபனானின் பிரதமரான ஹாசன் டயப் அவர்கள் அந்நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பைத் தொடர்ந்து தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
  • இந்தியாவானது 20 ஓவர் உலகக் கோப்பையின் 2021 ஆம் ஆண்டுப் பதிப்பை நடத்த உள்ளது. அதே நேரம் ஒத்தி வைக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுப் பதிப்பானது 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.
    • மேலும் இந்தியாவானது 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டியையும் இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் நடத்த உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்