TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 14 , 2020 1473 days 654 0
  • தேசிய அனல் மின் கழகமானது நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்த மின் உற்பத்தியின் அளவாக 100 பில்லியன் அலகுகளை எட்டியுள்ளது.
  • தலாய் லாமா அவர்கள் ஜெர்மனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பத்திரிக்கையாளரான பிரான்ஸ் அல்ட் என்பவருடன் சேர்ந்து எழுதிய தனது புதிய புத்தகமான நமது ஒரே இல்லம் : உலகிற்கான ஒரு காலநிலை முறையீடு” (Our Only Home: A climate Appeal to the world) என்ற புத்தகத்தை வெளியிட உள்ளார்.
  • போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் குறிமுறைகள் மீது பெண் குறியீடுகளைக் கொண்ட இந்தியாவின் முதலாவது நகரம் மும்பையின் தாதர் ஆகும்.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் துறையின் மீது கவனம் செலுத்தும் வகையில் தனது புதிய தொழிற் துறைக் கொள்கையை அறிவித்துள்ளது.
    • இந்தக் கொள்கையானது அம்மாநிலத்தில் தனது வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக வேண்டி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் துறைக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்