TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 22 , 2020 1465 days 697 0
  • சரக்கு மற்றும் சேவைகள் வரி ஆணையத்தின் அமைச்சகங்களுக்கிடையேயான ஒரு உயர்மட்டக் குழுவானது தங்கத்தின் மீது மாநிலத்திற்குள்ளே மேற்கொள்ளப் படும் சரக்குப் பரிமாற்றத்திற்கு விதிப்பதற்காக மின்னணு-வழிக் கட்டணத்திற்குப் பரிந்துரை செய்துள்ளது.
    • இது வரி ஏய்ப்பு மற்றும் கடத்தலின் கீழ் தங்கத்தின் பரிமாற்றத்தைக் கண்காணிக்க உதவ இருக்கின்றது.
  • மாநில அரசாங்கங்கள் மற்றும் 272 மாநில ஆட்சியர்கள் இணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்படும் 7 மாத கால அளவுள்ள நாஷா முக்த் பாரத்அல்லதுபோதைப் பொருளற்ற இந்தியாஎன்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
  • மத்திய அமைச்சர் புது தில்லியில் உள்ள துவாரகாவில் தேசிய சமூகப் பாதுகாப்பு மையக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார்.
  • ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கமானது இந்தியாவில்  3 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்டபுத்தாக்க சவால் நிதி 2020” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது. இது கோவிட் – 19 நோய்த் தொற்று மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றைக் கையாளுவதற்கு வேண்டி கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ இருக்கின்றது.
  • விமான விபத்து விசாரணை ஆணையமானது கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபாய்-கோழிக்கோடு விமானம் IX 1344 என்பதின் விமான விபத்து குறித்து விசாரிப்பதற்காக கேப்டன் S.S. சஹர் தலைமையில் 5 நபர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • விமானப் படையின் ஓய்வு பெற்ற துணைத் தளபதியான அர்ஜுன் சுப்பிரமணியம் அவர்கள்முழுக் கண்ணோட்டம் : இந்தியப் போர்கள் 1972-2020” என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
    • ‘இந்தியாவின் போர்கள் : இராணுவ வரலாறு 1947-1971’ என்ற அவருடைய முதல் புத்தகத்திற்கு பிறகு வெளியான புத்தகம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்