TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 23 , 2020 1464 days 660 0
  • சென்னையின் வியாசர்பாடியில் 'ரூ 5 மருத்துவர்' என்று பிரபலமாக அறியப்படும் டாக்டர் வி திருவேங்கடம் சமீபத்தில் காலமானார்.
  • உறுப்பு தானத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மேலும் இது மத்திய அரசின் விருதையும் பெற்றுள்ளது.
    • இங்கு 1,382 நன்கொடையாளர்களிடமிருந்து இதுவரை 8,163 உறுப்புகள் பெறப் பட்டு உள்ளன.
  • இந்தியப் பாரம்பரிய இசைப் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் அவர்கள் சமீபத்தில் காலமானார்.
    • அவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் போன்ற விருதுகள் அளிக்கப் பட்டுள்ளன.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கு வேண்டிய மலிவான மற்றும் எளிதான நடைமுறைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை வளர்ப்பதற்கு வேண்டி ஆயுஷ் அமைச்சகமானது  “நோய் எதிர்ப்புச் சக்திக்கான ஆயுஷ்” என்ற ஒரு மூன்று மாத காலப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • பாடகர் ஷாஜான் முஜீப் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில், ஸ்வச் பாரத் அபியான் பிரச்சாரத்திற்காக வேண்டி அலிகார் மாநகராட்சியின் முதல் தேசிய நிறுவன அடையாளத் தூதரானார் (National Brand Ambassador).
  • இந்தியாவின் தேசியப் பங்குச் சந்தை முதலீட்டாளர் பாதுகாப்பு நிதி அறக்கட்டளை மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்  ஆகியவை இணைந்து “முதலீட்டாளர் கல்விக்கான தளம்” என்ற பெயரில் ஒரு இணையதள முதலீட்டாளர் கல்வி வள மையத்தைத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்