இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்காட்லாந்து யார்டு காவல் அதிகாரியான நீல்பாசு (Neil Basu), ஸ்காட்லாந்தின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிய பாரம்பரியத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்ச்ரோலி மாவட்டத்தில் புனேவைச் சேர்ந்த ஆதர்ஷ் மித்ரா மண்டல் அமைப்பு சார்பில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக ஒரே இடத்தில் 7 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். இந்த நிகழ்ச்சியில் காந்திய சிந்தனைகள் மற்றும் அமைதி என்ற மராத்திய மொழிப் புத்தகத்தை அனைவரும் வாசித்தனர். இந்த புத்தக வாசிப்பை புதிய உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகம் பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே, துருக்கி நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் 18-ம் தேதி 5 ஆயிரத்து 754 பேர் ஒரே இடத்தில் கூடி புத்தகம் வாசித்ததே சாதனையாக இருந்தது.