TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 27 , 2020 1460 days 682 0
  • மத்திய அமைச்சரவையானது இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களைப் பொது-தனியார் பங்களிப்பின் மூலம் குத்தகைக்கு விடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • போர்ப்ஸ் கணிப்பின் படி, “2020 ஆம் ஆண்டில் அதிக ஊதியம் பெறும் நடிகர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்த ஒரே இந்திய நடிகர் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் (6வது இடம்) ஆவார்.
    • இந்தப் பட்டியலில் மல்யுத்த வீரராகி, அதன் பின் நடிகரான டுவைன் ஜான்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • மத்திய உள்துறை அமைச்சகமானது உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மான்டுவாடிக் இரயில் நிலையத்தை பனாரஸ் என்று மறுபெயரிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பஞ்சாப் மாநில அரசானது மத்திய அரசினால் சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசையின்படி, அம்மாநிலம் சுகாதார மற்றும் நல மையச் செயல்பாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
  • விளையாட்டுத் தளமான டிரீம் 11 ஆனது வரவிருக்கும் இந்தியன் பீரிமியர் லீகிற்கான அதிகாரப்பூர்வ விளம்பரதாரர் ஏலத்தில் வெற்றி பெற்றுள்ளது.
  • மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் 21 வரைசுகாதார சூழலியலை மறுவரையறை செய்தல்என்ற ஒரு கருத்துருவுடன்இந்திய சுகாதார நல வாரத்தைதொடங்கி வைத்துள்ளார்.
  • சந்திரயான் – 2 ஆனது ஜிஎஸ்எல்வி எம்கேIII – எம்1 என்ற செயற்கைக் கோளினால் விண்ணிற்கு ஏவப்பட்டதின் 1 ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளது.
    • இது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்