TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 29 , 2020 1459 days 605 0
  • எழுத்தாளரான சேத்தன் பகத் “திட்டமிடப்பட்ட கொலை” என்ற பெயர் கொண்ட தனது புதிய புத்தகத்தின் அறிமுகப் பகுதி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • விமானப் படை (விங்) தளபதியான கஜானந்த் யாதவ் என்பவருக்கு வான்வெளி சாகசப் பிரிவில் டென்சிங் நோர்கே தேசிய சாகச விருது 2019 ஆனது வழங்கப் பட்டுள்ளது.
  • அஸ்வானி பாட்டியா என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • ரோனி ஓ சல்லீவன் என்பவர் கெய்ரென் வில்சன் என்பவரை வீழ்த்தி 2020 ஆம் ஆண்டின் உலக ஸ்நூக்கர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
  • மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா மற்றும் அடோப் நிறுவனத் தலைவரான சாந்தனு நாராயணன் ஆகியோருக்கு 2020 ஆம் ஆண்டின் தலைமைத்துவ விருதுகளானது வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்