TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 31 , 2020 1457 days 623 0
  • நிலம், நீர்ப்பாசனம் மற்றும் பயிர் முறைகள் தொடர்பான அளவுருக்களின் தொகுப்பை அளவிடுவதற்கும், அதை மக்கள்தொகை மற்றும் நிதி அளவுருக்களுடன் இணைத்து விவசாயிகளுக்கு விரைவாக கடன் வழங்கும் முடிவுகளை எடுப்பதற்கும் செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தும் முதல் வங்கியாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி திகழ்கிறது.
  • டச்சு எழுத்தாளரான, மரிகே லூகாஸ் ரிஜ்னெவெல்ட் தனது "தி டிஸ்கம்போர்ட் ஆஃப் ஈவினிங்" (The Discomfort of Evening) என்ற  புத்தகத்திற்காக சர்வதேச புக்கர் பரிசை வென்ற இளைய எழுத்தாளர் ஆனார்.
  • ஐ.ஐ.டி முன்னாள் மாணவர் பேரவையானது ரஷ்யாவின் லோமோனோசோவ் மாஸ்கோ அரசு பல்கலைக்கழகம் மற்றும் ருசாஃப்ட் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமான கலப்பின குவாண்டம் கணினியை (Hybrid quantum computer) உருவாக்க ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது.
  • மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ, டி 20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எட்டிய முதல் பந்து வீச்சாளர் ஆனார்.
  • அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் 200 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டிய உலகின் முதல் மனிதர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்