TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 4 , 2020 1453 days 719 0
  • அகமதாபாத் இரயில்வே மண்டலமானது அகமதாபாத் இரயில் நிலையத்தில், பயண உடைமைகள் கிருமி நாசினி மற்றும் தூய்மையாக்கல் இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இந்திய இரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இதே வகையைச் சேர்ந்த முதலாவது இயந்திரம் இதுவாகும்.
  • கூகுள் நிறுவனமானது உலகம் முழுவதும் 250 நாடுகளுக்கும் மேல் கூகுள் மீட், கூகுள் கிளாஸ்ரூம், ஜி சூட் மற்றும் அதன் இதரப் பொருட்களில் 50 புதிய அம்சங்களை வழங்கும் வகையில்எங்கும் பள்ளிஎன்ற ஒரு புதிய முன்னெடுப்பை அறிவித்து உள்ளது.
  • சமீபத்தில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது தேக்கோ அப்னா தேஸ்என்ற தொடரின் கீழ்ஹைதராபாத்தின் கலாச்சாரப் பாரம்பரியம்என்ற தலைப்பு கொண்ட 50வது இணையவழிக் கருத்தரங்கை நடத்தியது.
    • இந்தத் தொடரானது இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தளங்களை ஊக்கப் படுத்துவதையும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • லாரா என்ற சூறாவளி (ஹரிக்கேன்) ஆனது அமெரிக்காவில் லூசியானாவின் கேமரானிற்கு அருகில் மிகக் கடுமையான அபாயகரமான 4ம் வகைப் புயலாகக் கரையைக் கடந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்