TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 20 , 2020 1438 days 624 0
  • சைலஜா ஆசிரியர் என்று வெகுவாக அழைக்கப்படும் கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சரான K.K. சைலஜா ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள பிராஸ்பெக்ட் என்ற பத்திரிக்கையினால் கோவிட்-19 நோய்த் தொற்றுக் காலத்தில் உலகின் முதல் 50 சிந்தனையாளர்களின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • ஆசாதி : சுதந்திரம், பாசிசம், கற்பனை” (Azadi: Freedom. Fascism. Fiction)  என்ற தலைப்பு கொண்ட ஒரு புதிய புத்தகமானது அருந்ததி ராய் அவர்களால் எழுதப் பட்டதாகும்.
    • இந்தப் புனைவுக் கதை புத்தகமானது உலகில் அதிகரித்து வரும் சர்வாதிகாரப் போக்கில் சுதந்திரத்தின் பொருளை எடுத்துக் காண்பிக்கும் கட்டுரைகளின் ஒரு தொகுப்பாகும்.
  • டாடா குழுமமானது லார்சன் மற்றும் டூப்ரோ  என்ற நிறுவனத்தை வீழ்த்தி இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தைக் கட்டமைக்கும் ஒப்பந்தத்தில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தப் புதிய பாராளுமன்ற வளாகமானது மத்தியக் கட்டிட (விஸ்டா) மறுகட்டமைப்பின் ஒரு பகுதியாக ஒப்பந்தம் விடப்பட்டு, இறுதி செய்யப் பட்ட முதலாவது திட்டங்களில் ஒன்றாகும்.
  • எண்ணெய் வயல்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டதிற்கான பணம் செலுத்தப் படாததின் காரணமாக, இந்தியாவின் எண்ணெய் மற்றும் இயற்கை வாயுக் கழகமானது சமீபத்தில் சூடான் எண்ணெய் வயல்களிலிருந்து வெளியேறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்