TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 3 , 2020 1426 days 751 0
  • சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பானது ஐக்கிய நாடுகள் தீவிரவாத எதிர்ப்புப் பயணத் திட்டத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முதலாவது அரசு சாராபங்காளராக ஐக்கிய நாடுகள் தீவிரவாத எதிர்ப்பு அலுவலகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்திய தேசிய அணியின் கோல்-கீப்பரான குர்பிரீத் சிங் சாந்து மற்றும் சஞ்சு யாதவ் ஆகியோர் முறையே 2019-20 ஆண்டிற்கான AIFF-ன் சிறந்த ஆண் கால்பந்து வீரர் விருது மற்றும் AIFF-ன் சிறந்த பெண் கால்பந்து வீரர் விருது என்ற விருதுகளின் வெற்றியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • நிதி ஆயோக் மற்றும் நெதர்லாந்து ஆகியவை தூய்மையான மற்றும் அதிக அளவிலான ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக கார்பன் நீக்கம் மற்றும் ஆற்றல் மாற்ற இலக்கிற்கு உதவுவதற்காக நோக்க ஆவணம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.
  • ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பரான பேட் அலைசா ஹியாலே 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து, எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்