TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 14 , 2018 2319 days 751 0
  • சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று மத்தியப் பிரதேச அரசானது அம்மாநிலத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட துணையற்ற தனிப் பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்காக ஓர் மாதாந்திர ஓய்வுதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்தகு வகையில் நாட்டில் மிகத் தனித்துவமிக்க மாதாந்திர ஓய்வூதிய திட்டம் இதுவேயாகும்.
  • நடப்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இணை செயலாளராக உள்ள திரு.ரவி தப்பார், லெபனானுக்கான அடுத்த இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். நெங்ச்சா   முகோபாத்யா தற்போது லெபனானுக்கான   இந்தியத் தூதராக உள்ளார்.
  • நாட்டின் தொழிற்துறை பயிற்சித் திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தூதராக இந்திய வம்சாவளி எஃகுத்துறை தொழிலதிபரான சஞ்சீவ் குப்தாவை பிரிட்டன் இளவரசர் சார்லஸ்  நியமித்துள்ளார். இத்திட்டம் 9 முதல் 21 வயது வரையிலான   இளைஞர்களின் திறன்களை வளர்க்கவும், அவர்கள் தொழிலக உற்பத்தியில் ஓர் உட்பார்வையைப் பெறவும்   உதவும்.
  • மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புனரமைப்பு அமைச்சகம் உச்சநீதிமன்ற நீதிபதி M. கான்வில்கர் தலைமையில் மகாநதி நதிநீர் பகிர்வு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.
    • டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி இந்த்வெர்மீட் கவுர் கோச்சர் மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ரவி ரஞ்சன் ஆகியோர் இத்தீர்ப்பாயத்தின் பிற இரு உறுப்பினர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்