TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 29 , 2020 1399 days 474 0
  • 2020 ஆம் ஆண்டின் சர்வதேச அறிவியல் திருவிழாவின் 6வது பதிப்பானது காணொலி வாயிலாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 முதல் 25 வரை நடத்தப்படும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • அண்டோராவின் முதன்மைப் பிராந்தியமானது சர்வதேச நாணய நிதியத்தின் 190வது உறுப்பினராக இணைந்துள்ளது.
    • இது பிரான்சு மற்றும் ஸ்பெயினுக்கு இடையே அமைந்த ஒரு சிறு பகுதியாகும்.
  • இங்கிலாந்து வங்கியின் ஆளுநரான மார்க் கார்னே என்பவர் 2020 ஆம் ஆண்டிற்கான   7வது வருடாந்திர சிறந்த மத்திய வங்கிக்கான விருது வழங்கும் நிகழ்வில் இந்த ஆண்டின் சிறந்த ஆளுநர் என்ற விருதை வென்றுள்ளார்.
    • கானா மத்திய வங்கியானது 2020 ஆம் ஆண்டிற்கான  வருடாந்திர சிறந்த மத்திய வங்கி என்ற விருதினை வென்றுள்ளது.
  • 1972 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அக்டோபர் 24 அன்று ஐக்கிய நாடுகளை ஏற்படுத்திய தினத்துடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் உலக மேம்பாட்டுத் தகவல் தினத்தை ஏற்படுத்த முடிவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்