TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 30 , 2020 1398 days 513 0
  • இரா.பார்த்திபனின் ஒத்த செருப்பு அளவு 7 மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் மத்திய அரசின் 'சிறப்பானவை' என்ற அடையாள வகையின் கீழ் கௌரவிக்க தேர்வு செய்யப் பட்டுள்ளன.
    • இந்தியப் பனோரமா பிரிவின் கீழ் 2020 ஆண்டின் கோவா சர்வதேசத் திரைப்பட விழாவிலும் இவை திரையிடப்பட உள்ளன.
  • மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவானது ஜார்க்கண்டில் உள்ள லதேஹர் என்ற மாவட்டத்தில் இந்தியாவின் முதல் தட்டாம் பூச்சியின் (டிராகன்ஃபிளை) புதைபடிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • நியூசிலாந்துப் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியானது அந்நாட்டின் பொதுத் தேர்தலில் மற்றுமொரு மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
  • உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் உ.பி.யின் லக்னோவில் பெண்களுக்கான ஒரு பாதுகாப்புப் பிரச்சாரமான பாதுகாப்பான நகரத் திட்டம்" என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
    • இது உள்துறை அமைச்சகத்தின் திட்டவடிவமான ஒரு முன்னெடுப்பாகும்.
  • கிசான் சூர்யோதய் யோஜனா என்ற ஒரு திட்டத்தை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
    • நீர்ப்பாசனத்திற்காக வேண்டி பகல் நேரத்தில் மின்சாரம் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்