TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 5 , 2020 1392 days 659 0
  • ரோலி அல்லது கோனி என்ற ஒரு சூறாவளியானது (டைபூன்) சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கியது.
  • பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதன்மைப் பங்காளராக ஜியோ நிறுவனம் இருக்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
    • இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் நடத்தப் பட இருக்கின்றது.
  • மத்திய நிதித் துறை அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயாக ரூ.1,05,155 கோடி வசூலிக்கப் பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
    • கடந்த எட்டு மாதத்தில் வசூலிக்கப் பட்டதில் இதுவே அதிகமாகும்.
  • ராஜஸ்தான் மாநில அரசானது கோவிட் – 19 நோய்த் தொற்றின் காரணமாக அங்கு பட்டாசுகளின் விற்பனைக்குத் தடை விதித்துள்ளது.
  • மதராஸில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது கோவிட் – 19 வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “IITM COVID GAME” என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது.
  • பாகிஸ்தானின் அலீம் ர் என்பவர் மிக அதிக அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றி (210) தென் ஆப்பிரிக்காவின் ரூடி கோர்ட்சென் என்பவரின் சாதனையை முறியடித்துள்ளார்.
  • மனுதாரர்களுக்கு விரைவாக நீதி வழங்க வழிவகை செய்யும் வகையில் போக்குவரத்திற்கான இந்தியாவின் முதலாவது மின்னணு வள மையம் மற்றும் மெய்நிகர் மையமான “நியாய் கௌசல்” ஆனது நாக்பூரில் தொடங்கப் பட்டுள்ளது.
  • புகழ்பெற்ற வயலின் இசைஞானி மற்றும் பத்ம பூஷண் விருது பெற்ற டி.என்.கிருஷ்ணன் அவர்கள் சென்னையில் காலமானார்.
    • இவர் 1973 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ மற்றும் 1992 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப் பட்டார்.
  • நிறுவனங்கள் தங்கள் உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவும் வகையில், ட்விட்டரானது இந்தியாவில் ஆர்ட்ஹவுஸ் (ArtHouse) எனும் வசதியை அறிமுகப்படுத்துகிறது.
  • நேபாள ராணுவத்தின் ஜெனரல்' என்ற கௌரவ பதவியைப் பெற இந்திய ராணுவ தலைமைத் தளபதியான எம்.எம்.நரவனே அவர்கள் நேபாளம் செல்ல இருக்கின்றார்.
  • சூரிய ஆற்றலால் இயக்கப்படும் முதல் இரயிலானது கேரளாவில் முதல்வர் பினராயி விஜயனால் தொடங்கப் பட்டது.
    • நாட்டில் இவ்வகையிலான முதல் ரயில் இதுவே ஆகும்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்