TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 16 , 2020 1381 days 562 0
  • இணைய வழிச் செய்திகள், திரைப்படங்கள், காணொளி நிகழ்ச்சிகள் மற்றும்  டிஜிட்டல் உள்ளடக்க வழங்குநர்களான நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றை மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு உத்தரவை மத்திய அரசானது பிறப்பித்து உள்ளது.
    • இதுவரை டிஜிட்டல் உள்ளடக்கத்தை நிர்வகிக்க தன்னாட்சி அமைப்பு எதுவும் இந்தியாவில் இல்லை.
  • ‘இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா ஆகியவற்றில் ஒத்துழைப்பினை ஆழமடையச் செய்தல்: முக்கிய துறைகளின் மீதான பார்வைகள்’ குறித்த இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா என்ற ஒரு அறிக்கையை இந்திய வெளியுறவு விவகார அமைச்சகமானது வெளியிட்டுள்ளது.
  • அபுதாபி அரசின் சொத்து நிதியானது (Sovereign wealth fund) இந்தியாவில் முழு வருமான வரி விலக்கைப் பெறும் முதலாவது நிதியாகும் என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது.
  • இரண்டாவது உலக சுகாதாரக் கண்காட்சியானது சீனாவின் வூஹானில் நடத்தப் பட்டது.
  • பெங்களூரிவில் உள்ள நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் சயின்சஸ் என்ற மையத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் குழுவானது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு அளிக்காத வகையில் நிலக்கடலை ஓடுகளிலிருந்து ஒரு திறன் திரையை (smart screen) உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்