TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 20 , 2020 1377 days 593 0
  • ஆசியாவின் முதலாவது சூரிய ஆற்றல் கொண்டு இயங்கக் கூடிய ஜவுளி உற்பத்தி ஆலையானது மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் வர உள்ளது.
  • உலக வங்கியும் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையும் இணைந்து (Department of Investment and Public Asset Management) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
    • இந்த ஒப்பந்தத்தின் கீழ், உலக வங்கியானது சொத்தைப் பணமாக்குதல் (asset monetisation) குறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறைக்கு ஆலோசனை வழங்க உள்ளது.
  • தென் சீனக் கடலிலும் பசிபிக் தீவு நாடுகளிலும் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள வேண்டி ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் ஒரு “பரஸ்பர அணுகல் ஒப்பந்தத்தில்” (Reciprocal Access Agreement) கையெழுத்திட உள்ளன.
    • 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஜப்பானின் இறையாண்மையில் வெளிநாட்டு இராணுவ இருப்பை அனுமதிக்கும் முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
  • பெருவின் அதிபர் மானுவல் மெரினோ அந்நாட்டின் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப் பட்டு உள்ளார்.
  • 2020 ஆம் ஆண்டிற்கான ஆசியான் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் வியட்நாம் 37வது ஆசிய உச்சி மாநாட்டை இணைய வழியில் நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்