TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2020 1373 days 553 0
  • மத்திய வர்த்தகத் துறை அமைச்சரான பியூஷ் கோயல் அவர்கள் 2020 ஆம் ஆண்டின் ஆசிய சுகாதார மாநாட்டில் உரையாற்றினார்.
    • இந்த மாநாடு இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பினால் ஒருங்கிணைக்கப் பட்டது.
  • முதன்முறையாக இந்திய இராணுவமானது தனது டி-72 மற்றும் டி-90 என்ற பிரதான போர் பீரங்கி வகைகளுக்கான சிறப்புமிகு வெடிபொருட்களின் மேம்பாடு மற்றும் விநியோகத்திற்காக வேண்டி ஒசோகார்ப்  குளோபல் (OshoCorp) என்ற நிறுவனத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
    • தனியார் நிறுவனத்துடன் இந்திய இராணுவம் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
  • ஆல்டோ பார்ட்னர்ஸின் நிறுவன உறுப்பினர் மற்றும் அக்கார்டு இந்தியாவின் நிறுவனத் தலைவரான டாக்டர் பிஷ் அகர்வால் என்பவருக்கு 2020 ஆம் ஆண்டின் ஏஇஎஸ்சி வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
    • ஓர் ஆசியருக்கு அதிலும் ஓர் இந்தியருக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • ஆடம் யாவ் லியூ என்பவர் இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் பொருளாதார ஆராய்ச்சி என்ற விருதின் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • மத்தியப் பிரதேசத்தின் முதல்வரான சிவராஜ் சிங் சௌகான் அவர்கள் 2023 ஆம் ஆண்டில் தற்சார்பு மத்தியப் பிரதேசத்தை அடைவதற்கான ஒரு செயல் திட்டத்தை வெளியிட்டு உள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் உத்தி மீதான தற்சார்பிற்காக ஒரு செயல்திட்டத்தை வெளியிட்ட முதலாவது மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.
  • இந்தியாவின் முதலாவது பாசித் தோட்டமானது உத்தரகாண்ட்டின் நைனிடாலில் உருவாக்கப் பட்டுள்ளது.
    • இந்த தோட்டமானது பாசிகள் மற்றும் இதர பிரையோபைட்டுகளின் பல்வேறு இனங்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்