TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 29 , 2020 1367 days 602 0
  • இந்தியாவின் வணிகப் பற்றாக்குறை கடுமையாகக் குறைந்துள்ளதால், ஏப்ரல்-ஜூன் மாதங்களில் நடப்புக் கணக்கு உபரியானது 19.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • விர்ஜின் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் தொழில்நுட்ப மற்றும் வணிக நம்பகத் தன்மையை ஆராய நிதி ஆயோக்கானது ஒரு குழுவை அமைத்துள்ளது.
    • இந்தக் குழு நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் அவர்களைத்  தலைவராக கொண்டு இருக்கும்.
  • நாட்டில் முதல் முறையாக வில்லோ வார்ப்ளர் (Willow Warbler) என்ற ஒரு பறவையானது சமீபத்தில் கேரளாவின் புஞ்சகரி என்ற பகுதியில் காணப் பட்டது.
    • வடக்கு மற்றும் மிதவெப்பமண்டல  ஐரோப்பா முழுவதும் வாழக்கூடிய மற்றும் நீண்ட தூரம் வலசை செல்லக் கூடிய சிறிய பறவை வகைகளுள் இதுவும் ஒன்றாகும்.
  • மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டானது வெளிநாட்டு மொழி என்ற  திரைப்பட பிரிவில் ஆஸ்கார் விருதிற்குப் போட்டியிட இந்தியாவினால் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்