TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 30 , 2020 1367 days 597 0
  • நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த  கிரேக் பார்க்லே என்பவர் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இவர் இந்தியாவின் சஷாங்க் மனோகர் என்பவருக்கு மாற்றாக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையானது அம்மாநிலத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
    • மேலும் இது மதமாற்றத்திற்காக நடத்தப்படும் திருமணங்களை செல்லாதவை என்று அறிவிக்க உள்ளது.     
  • ஜெர்மனியானது அந்நாட்டில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் உள்ள உயரிய மேலாண்மைப் பதவிகளில் பணியாற்றும் பெண்களுக்காக கட்டாய இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது.
  • சர்வதேசக் கணினிப் பாதுகாப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • இது தகவல் பாதுகாப்பில் சிறந்த நடைமுறைகளை ஊக்கப்படுத்துவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்