TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 5 , 2020 1361 days 588 0
  • மெரியம்-வெப்ஸ்டர் அகராதியால் 2020 ஆம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக ‘பாண்டமிக்’ (Pandemic – நோய்த் தொற்று) என்ற சொல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • “உலகின் மிகத் தனிமையான யானை” காவன் (36) பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் மிருகக் காட்சி சாலையில் இருந்து கம்போடிய நாட்டுச் சரணாலயத்தில் ஓய்வு பெறுவதற்காக வேண்டி தனது பயணத்தைத் தொடங்கி உள்ளது.
    • காவன் ஆனது பாகிஸ்தானில் உள்ள ஒரே ஒரு ஆசிய யானையாகும்.
  • ஒருண்டோய் என்ற ஒரு திட்டமானது அசாம் அரசால் தொடங்கப்பட உள்ளது.
    • இந்தத் திட்டத்தின் மூலம், பெண்கள் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் ரூ.830 என்ற தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற அந்த மாநில அரசாங்கம் முயல்கிறது.
  • பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸின் (BAFTA) திருப்புமுனை என்ற முன்னெடுப்பின் (Breakthrough Initiative) தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிக்கப் பட்டு உள்ளார்.
    • நெட்ஃபிலிக்ஸ் ஆதரிக்கும் இந்த முயற்சியானது, இந்தியாவில் திரைப்படம், விளையாட்டுகள் அல்லது தொலைக்காட்சியில் நிலவி வரும் ஐந்து திறமைகளை அடையாளம் காண்பது, கொண்டாடுவது மற்றும் அவற்றை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆசிய அபிவிருத்தி வங்கியானது ‘ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய ஒத்துழைப்பின் எதிர்காலம்’ என்ற ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
  • இந்தியாவின் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது ஐசிஐசிஐ லோம்பார்டு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படும் பாரதி ஏஎக்ஸ்ஏ பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் கையகப்படுத்தலுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் 110 வேளாண் தொழலாளர்கள் கொல்லப் பட்டதற்காக போகோ ஹராம் ஜிகாதிஸ்ட் தீவிரவாதிகள் மீது குற்றம் சுமத்தப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்