TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 12 , 2020 1354 days 727 0
  • செங்கடலில் உள்ள ஆமைகளானது கடல் வெப்பநிலையின் காரணமாக பெண்பாலாக மாறி வருகின்றது.
  • “இணைய வழிக் குற்றங்களின் மறைமுக விளைவுகள்” என்ற ஒரு உலக அறிக்கையானது மெக்கபி (McAfee)  என்ற ஒரு நிறுவனத்தினால் தயாரிக்கப் பட்டு உள்ளது.
  • உலக சாதனைப் படைத்தவர்களாக மோன்டோ டியூபிளான்டிஸ் (சுவீடன்) மற்றும் யுலிமர் ரோஜாஸ் (வெனிசுலா) ஆகியோர்  உலக ஆண் மற்றும் பெண் தடகள வீரர்களாகப் பெயரிடப் பட்டுள்ளனர்.
  • உத்தரப் பிரதேசத்தில் லக்னோ-வாரணாசி இரயில் பிரிவில் அமைந்துள்ள தண்டுப்பூர் என்ற ஒரு இரயில் நிலையமானது மா பாராகி தேவி தாம் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உலக சுகாதார வல்லுநரான அணில் கோனி என்பவர் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள உலக சுகாதார அமைப்பு என்ற ஒரு அறக்கட்டளையின் தொடக்கத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப் பட்டு உள்ளார்.
  • சிக்கிம் மாநிலத்திற்குப் பிறகு 100% கரிம வேளாண்மையை அடைந்த முதலாவது ஒன்றியப் பிரதேசம் இலட்சத் தீவு ஆகும்.
  • இந்திய இரயில்வேயானது தில்லி-வாரணாசி அதிவேக இரயில் பெருவழிப் பாதைக்கான நில ஆய்விற்கு லிடார் என்ற தொழில்நுட்பத்தைப் (LiDAR technique) பயன்படுத்த உள்ளது.
    • லிடார் என்பது ஒளியைக் கண்டறிதல் மற்றும் வரம்புத் தொழில்நுட்பம் (Light Detection and Ranging technique) என்பதைக் குறிக்கின்றது.
  • சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் நிறுவனமானது நுண்ணலைக் கதிர்வீச்சு என்பது மர்மமான நரம்பியல் குறைபாடான “ஹவானா” என்ற  ஒரு குறைபாட்டிற்கு முக்கியக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளது.
    • ஹவானா என்ற ஒரு குறைபாடானது கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சீனா, கியூபா, மற்றும் இதர நாடுகளில் உள்ள அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
  • சமீபத்தில் “கண்ணாடியிழையின் தந்தை” எனப்படும் நரேந்திர சிங் கபானி (94) என்பவர் அமெரிக்காவில் காலமானார்.
    • 1954 ஆம் ஆண்டில் கண்ணாடியிழையின் மூலம் படங்களைப் பரிமாறியதில் இவர் முதலாமானவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்