TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 15 , 2020 1351 days 602 0
  • ஷேக் சபாஹ் அல்-ஹாலித் அல்-சமாஹ் அவர்கள் குவைத் நாட்டின் 8வது பிரதமராக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • இதற்கு முன்பு அப்பதவியில் இருந்த ஜாபெர் – அல் முபாரக் அல் ஹமத் அல்-சபாஹ் என்பவரது பதவி விலகலுக்குப் பிறகு இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் பீகாரில் உள்ள சோன் நதியின் மீது கட்டப்பட்டுள்ள கோலிவர் பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிலம் மற்றும் வீட்டு வசதி ஆய்வைத் தொடங்குவதற்காக இந்தியக் கள ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • இது “ஓய்எஸ்ஆர் ஜெகனன்னா சாஸ்வத பூமி ஹாக்கு-பூமி ரக்சனா” என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • மோல்னுபிரவிர் என்ற மருந்தானது 24 மணி நேரத்தில் சார்ஸ்-கோவ்-2 (SARS-CoV-2) என்ற தொற்றின் பரவுதலைத் தடுக்கும் வகையில் செயல்படுவதைக் காட்டுகின்றது.
    • SARS-CoV-2 தொற்று பரவுதலை விரைவாகத் தடுக்கும் வகையில் வாய் வழியாகச் செலுத்தப்படும் முதலாவது மருந்து இதுவாகும்.
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்பின் 93வது வருடாந்திரப் பொது சந்திப்பு மற்றும் வருடாந்திர மாநாட்டில் தனது தொடக்க உரையை நிகழ்த்தினார்.
    • இந்த வருடாந்திர மாநாட்டின் கருத்துரு, “ஊக்கம் பெற்ற இந்தியா” என்பதாகும்.
  • ஆர்டெமிஸ் என்ற நிலவில் தரையிறங்கும் ஒரு திட்டத்திற்காக, இந்திய அமெரிக்கரான ராஜா ஜோன் வுர்புத்தூர் சாரி அவர்கள் 18 விண்வெளி வீரர்களில் ஒருவராக நாசாவினால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
    • இந்தத் திட்டமானது 2024 ஆம் ஆண்டில் நிலவில் முதலில் பெண்ணையும் அடுத்து ஆண் ஒருவரையும் தரையிறங்க வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கேரளா சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா அவர்கள் அம்மாநிலத்தில்பிளாஸ்மோடியம் ஓவல்எனப்படும் மலேரியாவின் புதிய மரபணு ஒன்று  கண்டறியப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்