TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 17 , 2020 1349 days 581 0
  • 2021 ஆம் ஆண்டின் ஜனவரி 26 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இந்தியப் பிரதமரின் அழைப்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக் கொண்டு உள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியானது 2022 ஆம் ஆண்டில் நியூசிலாந்தில் நடைபெறும்.
  • இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான ‘சுவாதிநாதா சரக்’ என்ற ஒரு சாலையானது 2021 ஆம் ஆண்டு மார்ச் 26 அன்று திறக்கப் படும்.
    • இந்தச் சாலையானது வங்கதேசத்தின் மெஹெர்பூர் மாவட்டத்தில் உள்ள முஜிப் நகர் வழியாக இந்தியாவை இணைக்கும்.
  • ஐக்கிய அரபு அமீரகமானது தனது தலைநகரான அபுதாபியில் கோவிட் -19 தடுப்பூசிகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • இந்த வளைகுடா நாடு உலகெங்கிலும் பரவலாக தடுப்பூசி போடத் தொடங்கிய நாடுகளில் ஒன்றாகும்.
  • இந்தியா போஸ்ட் பணவழங்கீட்டு வங்கியும்  அஞ்சல் துறையும் இணைந்து புதிய டிஜிட்டல் கட்டண பயன்பாட்டான ‘டக்பே’ என்ற வசதியை (DakPay) அறிமுகப் படுத்தி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்