TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 18 , 2020 1348 days 762 0
  • 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் கடத்தல் என்ற ஒரு அறிக்கையின்படி மிசோரமானது மியான்மரிலிருந்து மிக முக்கியமான போதைப் பொருட்கள் கடத்தல் வழிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
  • சினிமாஸ்கோப் (CinemaSCOpe) என்பது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளுக்காக இந்தியத் தூதரகத்தினால் பிரத்தியேகமாகத் தொடங்கப்பட்ட ஒரு திரைப்படத் தொடராகும்.
  • சமீபத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவானது பிரேக் டான்சிங் (Breakdancing) எனும் ஒரு நடனத்தை அதிகாரப் பூர்வ ஒலிம்பிக் விளையாட்டாக உறுதி செய்துள்ளது.
    • இது 2024 ஆம் ஆண்டின் பாரிஸ் விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட உள்ளது.
  • சமீபத்தில் இந்திய இரயில்வேயானது மருத்துவமனை மேலாண்மைத் தகவல் முறைமை எனும் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளது.
    • இந்தத் திட்டத்தின் சோதனைப் பதிப்பானது தெற்கு மத்திய இரயில்வேயில் தொடங்கப் பட்டுள்ளது.
  • சாக்சம் என்ற ஒரு கடலோர ரோந்துக் கப்பலானது கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தில் உருவாக்கப் பட்டு வருகின்றது.
    • முதலாவது மற்றும் கடைசி கடலோர ரோந்துக் கப்பல் இதுவேயாகும்.
  • சமீபத்தில் அமெரிக்க செனட் சபையானது தேசியப் பாதுகாப்பு அதிகாரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
    • இது இந்தியாவை அமெரிக்காவின் நேட்டோ கூட்டு நாடுகள் மற்றும் தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தீயணைப்புப் பாதுகாப்புச் சான்றளிப்புச் செயல்பாடுகளை நவீனப்படுத்துவதற்கான ஒரு அமைப்பிற்கு ஒப்புதல் வழங்கிய இந்தியாவின் முதலாவது மாநிலம் குஜராத் ஆகும்.
  • மணிப்பூரைச்  சேர்ந்த கங்கோம் பாலா தேவி என்பவர் தொழில்சார் ரீதியில் ஒரு ஐரோப்பியக் கால்பந்து லீக்கில் கோல் அடித்த முதலாவது இந்தியப் பெண்மணியாக சாதனை படைத்துள்ளார்.
    • இவர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்காட்லாந்து சங்கத்தில் இணைந்ததின் மூலம் தொழில்சார் ரீதியில் ஒரு அயல்நாட்டு கால்பந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதலாவது இந்தியப் பெண்மணி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்