TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 22 , 2020 1344 days 551 0
  • மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகமானது யோகாசனத்தை ஒரு போட்டித் தன்மை கொண்ட விளையாட்டாக அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
    • சர்வதேச யோகாசன விளையாட்டுகள் கூட்டமைப்பானது யோகா குருவான பாபா ராம்தேவ் என்பவரின் கீழ் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைக்கப்பட்டது.
  • கத்தாரின் தலைநகரான தோஹா ஆனது 2030 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் என்றும் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் ஆனது 2034 ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் என்றும் ஆசியாவின் ஒலிம்பிக் ஆணையமானது அறிவித்துள்ளது.
    • மேலும் தோஹா நகரமானது 2022 ஆம் ஆண்டு பிபா உலகக்  கோப்பைப் போட்டியையும் நடத்த உள்ளது.
  • இந்திய அரசானது ”விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்தல்’ எனப்படும் 100 பக்கம் கொண்ட ஒரு மின் புத்தகக் கையேட்டை வெளியிட்டுள்ளது.
    • இந்த கையேடானது ஒப்பந்தப் பண்ணையத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகளின் வெற்றிகரமான நிகழ்வுகளை எடுத்துக் காட்டுகின்றது.
  • மத்தியக் கலாச்சாரத் துறை அமைச்சகமானது 2022 ஆம் ஆண்டில் நேதாஜியின் 125வது பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அருங்காட்சியகத்தைத் திறக்க உள்ளது.
  • சமீபத்தில் இந்திய தேசியப் பணவழங்கீட்டுக் கழகமானது (National Payments Corporation of - NPCI) நேரடித் தொடர்பற்ற ரூபே வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • ரூபே முன்செலுத்து அட்டையானது அனைத்துப் பண வழங்கீடுகளுக்கும் வேண்டி ஒரே அட்டை வசதியை வழங்குவதற்காக 2014 ஆம் ஆண்டில் NPCI கழகத்தினால் அறிமுகப் படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்