TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 23 , 2020 1343 days 577 0
  • டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவிற்கு நீடித்த வணிகம் மற்றும் அமைதியின் உலகளாவிய தொலைநோக்குப் பார்வை என்ற ஒரு விருது வழங்கி கௌரவிக்கப் பட உள்ளார்.
  • சமீபத்தில் கர்நாடக முதல்வரான எடியூரப்பா அவர்கள் “பெங்களூரு திட்டம் 2022” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    • இந்தத் திட்டமானது பெங்களூரு மக்களின் தினசரிப் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றைக் களைவதற்கு வேண்டி பெங்களூரு மக்களுக்குத் தேவையான கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவற்றை  அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமெரிக்கா வான் படையானது தனது உறுப்பினர்களுக்குப் புதிய பெயரைச் சூட்டி உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இதன் விண்வெளி வல்லுநர்கள் தற்பொழுது “பாதுகாவலர்கள்” (Guardians) என்று அழைக்கப்பட உள்ளனர்.
  • சமீபத்தில் யுனெஸ்கோ அமைப்பானது சிங்கப்பூரின் கூவி விற்கும்படியான ஒரு  தெருவோர உணவுக் கலாச்சாரத்தை அங்கீகரித்துள்ளது.
    • இது அதனை தொட்டுணர முடியாதது என்ற கலாச்சாரப் பாரம்பரியத்தின் கீழ் இணைத்துள்ளது.
  • பாகிஸ்தான் நாடானது தேசியப் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டை உருவாக்க உள்ளது.
    • ஒரு நாட்டில் உருவாக்கப்படும் முதலாவது தேசியப் பாலியல் குற்றவாளிகள் பதிவேடு இதுவேயாகும்.
  • சூரிய ஒளிக் காற்று ஊடுருவுதல் என்பது சமீபத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு இணையவழித் தாக்குதலாகும்.
  • N501Y எனப்படும் கொரானா வைரஸின் ஒரு புதிய வகை தொற்றானது ஐக்கியப் பேரரசில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்