TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 26 , 2020 1340 days 596 0
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் சொத்து மற்றும் நிலம் தொடர்பான பிரச்சினைகளை ஒழிப்பதற்காக வரசாத் எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • தேசிய நீர் திட்டமானது நேரு யுவகேந்திரா சங்கதன்  என்ற அமைப்புடன் இணைந்து மழை நீர்ச் சேமிப்பை ஊக்கப்படுத்துவதற்காகஜல் சக்தி அபியான் II : மழை நீர் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்குதல்என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.
    • இந்தப் பிரச்சாரத்தின் முழக்கம்எங்கு மழை நீர் விழுகிறதோ, எப்போது மழைநீர் விழுகிறதோ அதனைச் சேமித்தல்என்பதாகும்.
  • மத்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் மீன் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்காக வேண்டி ஒரு தகவல் அழைப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது.
    • இது தொடர்பான இந்தியாவின் முதலாவது தகவல் அழைப்பு மையம் இதுவாகும்.
  • கேரள மாநில அரசு மற்றும் ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு ஆகியவை இந்தியாவின் முதலாவது பாலினத் தரவு மையத்தைத் தொடங்குவதற்காக வேண்டி கூட்டு சேர்ந்துள்ளன.
    • இது திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாலினப் பூங்காவில் ஏற்படுத்தப்பட உள்ளது.
  • இமாச்சலப் பிரதேச முதல்வரான ஜெய்ராம் தாகூர் அவர்கள் 2020 ஆம் ஆண்டின் சர்வதேச கீதா மகா உத்சவத்தை ஹரியானாவின் குருசேத்திராவில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்