TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 30 , 2020 1336 days 573 0
  • மகாராஷ்டிர மாநிலமானது புனேவில் ஒரு சர்வதேச விளையாட்டுப் பல்கலைக் கழகத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமானது (ISRO) விண்வெளிக்கான ஒரு பிராந்தியக் கல்வி மையத்தை அமைப்பதற்காக உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஐஐடி-பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • காற்றுத் தரநிர்ணய ஆணையமானது குழாய்மயமாக்கப் பட்ட இயற்கை எரிவாயு முறைக்கு மாறுமாறு புதுதில்லியின் தேசியத் தலைநகரப் பகுதியிலுள்ள அனைத்துத் தொழிற்துறை நிறுவனங்களையும் சமீபத்தில் வலியுறுத்தியுள்ளது.
  • மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகமானது-சம்பதாஎனப்படும் ஒரு புதிய தளத்தையும் ஒரு புதிய கைபேசி செயலியையும் சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளது.
    • இந்தச் செயலியானது அரசுத் துறைகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கான வாழ்விட அணுகுதலை எளிமைப்படுத்துவதை ஊக்குவிக்க உள்ளது.
  • ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவையானது பிரதான் மந்திரி கிசான் பீமா யோஜனா என்ற திட்டத்திற்கு மாற்றாக தனது புதிய பசல் ரஹத் யோஜனா என்ற திட்டத்தைச்  செயல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டின் எப்ஐசிசிஐ (FICCI) இந்திய விளையாட்டு விருதுகளில் வான் படை விளையாட்டுக் கட்டுப்பாட்டு வாரியமானதுவிளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த நிறுவனமாகதேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்திய அஞ்சல் துறையானது 2019-20 ஆம் ஆண்டில் அஞ்சல் துறைப் பணியாளர்களின் சிறந்த சாதனைகளுக்காக மேகதூத் விருதுகளை வழங்கியுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலானது 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்காக வேண்டி தபால் வாக்குகள் முறை  அறிமுகம் செய்யப் படுவதைக் காண உள்ளது.
  • ஆசிய இளையோர் சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த யாஷ் வர்தன் அவர்கள் சர்வதேச ஆன்லைன் (நிகழ்நேர) துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பின் 6வது பதிப்பில் 10 மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
    • இந்த மூன்றாவது பதிப்பில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்