TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 4 , 2021 1331 days 688 0
  • 2021 ஆம் ஆண்டில் எஸ்தோனியா, பராகுவே மற்றும் டொமினியன் குடியரசு உள்ளிட்ட மூன்று நாடுகளில் இந்தியத் தூதரக அலுவலங்களைத் தொடங்க மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீது 8.5% என்ற அளவிலான வட்டி விகிதத்தை மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
  • சமீபத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையானது 2026 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் முதலாவது அணு உலையை அமைப்பதற்கான ஒரு அறிவிக்கையை வெளியிட்டு உள்ளது.
  • 14வது வார கர்ப்ப காலம் வரை கருக்கலைப்புகளை மேற்கொள்வதை அர்ஜென்டினா நாடு சட்டப் பூர்வமாக்கியுள்ளது.
  • இரயில்வே வாரியத்தின் தலைவரான வி.கே. யாதவ் என்பவருக்கு சிறந்த பொறியாளர் விருது - 2020 என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
    • இந்திய ரயில்வேயில் நவீனமயமாக்கல் மற்றும் சீர்திருத்தங்களுக்கு அவர் செய்த சிறப்பான பங்களிப்பிற்காக பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்த  விருதானது  அவருக்கு  வழங்கப் பட்டுள்ளது.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் அணிவகுப்புக் காட்சியகமானது 2021 ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பிற்காக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
    • இந்த அணிவகுப்புக் காட்சியகமானது சத்தீஸ்கரின் பழங்குடியினப் பகுதிகளில் பயன்படுத்தப் படும் நாட்டுப்புறக் கலைகளை அதன் கலாச்சாரச்  சூழலுடன் காண்பிக்க உள்ளது.
  • சீனாவின் தொழிலதிபரான ஜாங் ஷான்ஷன் என்பவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்