TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 5 , 2021 1330 days 792 0
  • கிழக்கு இரயில்வேயின் முன்னாள் பொது மேலாளர் சுனீத் சர்மா அவர்கள், புதிய இரயில்வே வாரியத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இந்திய உருக்கு ஆணையத்தின் (Steel Authority of India Limited) புதிய தலைவராக சோமா மண்டல் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
    • இவர் இந்திய உருக்கு ஆணையத்தின் முதல் பெண் தலைவராவார்.
  • கிசான் கல்யாண் என்ற ஒரு திட்டத்தை உத்தரப் பிரதேச அரசானது தொடங்க உள்ளது.
    • உத்தரப் பிரதேச மாநிலத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ள பகுதிகளில் உள்ள உழவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பஞ்சாப் அமைச்சரவையானது சமீபத்தில் பஞ்சாப் மாநில தரவுக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • ஒரு விரிவான தரவுக் கொள்கையை வகுத்த இந்தியாவின் முதல் மாநிலமாக இது திகழ்கிறது.
  • கே.சிவனின் பதவிக் காலத்தை மேலும்  ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க (2022 ஜனவரி 14 வரை) அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இவர் தற்போதைய விண்வெளித் துறையின் செயலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்  பதவி வழித் தலைவராவார்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது அதன் 63வது ஆண்டு தொடக்க தினத்தை  2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று அனுசரித்தது.
    • இது 1958 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • கோவாவின் 14 வயதான லியோன் மென்டோன்கா இத்தாலியில் நடைபெற்ற வெர்கனி கோப்பையில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் 67வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
    • தமிழ்நாட்டின் ஜி.ஆகாஷுக்குப் பிறகு இந்த ஆண்டு கிராண்ட் மாஸ்டரான இரண்டாவது இந்தியர் லியோன் ஆவார்.
  • இந்திய உள்துறை அமைச்சர் தேசியக் காவல் கே-9 என்ற இதழைப் புது தில்லியில் வெளியிட்டார்.
    • இது கே 9 என்ற காவல் சேவைகள், காவல் நாய்கள் போன்றவை பற்றிய நாட்டின் முதல் மாதிரியான வெளியீடாகும்.
  • கஜகஸ்தான் நாடு சமீபத்தில் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்