TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 12 , 2021 1323 days 749 0
  • பஞ்சாப் முதல்வரான அமரேந்திர சிங் அவர்கள் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மாதவிடாய்ச் சுகாதாரத் துணிகளை வழங்குவதற்காக ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
    • மேலும் அம்மாநிலத்தில் உள்ள குடிசைகளில் வாழ்பவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதற்காக பசீரா என்ற ஒரு திட்டத்தையும் அவர் தொடங்கி உள்ளார்.
  • மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு மத்திய நிதித்துறை அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புச் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மூன்றாவது மாநிலம் தெலுங்கானா ஆகும்.
  • சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவையானது ஜம்மு காஷ்மீரின் தொழிற்துறை மேம்பாட்டை ஊக்கப்படுத்துவதற்காக வேண்டி ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இது அந்தத் திட்டத்திற்காக ரூ.28,400 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
  • பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக, இதே வகையைச் சேர்ந்த ஒரு முதல் முயற்சியாக அசாம் மாநில அரசானது பள்ளிகளில் வகுப்புகளைப் புறக்கணிக்காமல் செல்லும் பெண் குழந்தைகள் ஒரு நாளைக்கு ரூ.100 ஊக்கத் தொகை பெறுவார்கள்  என்று அறிவித்துள்ளது.
  • ஜெர்மனியின் ஒரு புதிய சட்டத்தின்படி, 4 நிர்வாகிகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட நிர்வாகிகளைக் கொண்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது நிர்வாகக் குழுவில் குறைந்தது 1 பெண் உறுப்பினரையாவது நியமிக்க வேண்டும்.
    • ஜெர்மனியில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பல தன்னார்வ முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து இந்தச் சட்டம் முன்மொழியப் பட்டுள்ளது.
  • இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அவர்கள், ”இந்தியாவின் 71 ஆண்டு கால டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியாவில் வெற்றிக்கான பயணம்என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • இந்தப் புத்தகமானது  1947/48 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவில் இந்தியா மேற்கொண்ட முதல் 12 சுற்றுப் பயணங்களைப் பிரதிபலிக்கின்றது.
  • சிறு நிதியியல் வங்கிக்கு மாறிய முதலாவது நகர்ப்புற கூட்டுறவு வங்கி சிவாலிக் மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி ஆகும்.
    • இது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், தில்லி மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் செயல்படுகின்றது.
  • திரிபுரா மாநில அமைச்சரவையானது 2018 ஆம் ஆண்டு மார்ச் வரை அரசியல் வன்முறைகளால் உயிரிழந்தவர்களின் நெருங்கிய மற்றும் அடுத்தக் கட்ட  உறவினர்களுக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்துள்ளது.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகமானது கடற்படைப் புத்தாக்கம் மற்றும் உள்நாட்டு மயமாக்கல் என்ற ஒரு  அமைப்பைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்