TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 28 , 2018 2305 days 757 0
  • பேஸ்புக் தரவு ஊழல் பிரச்சனைகளுக்கு மத்தியில் தலைமைத் தேர்தல் ஆணையர் P.ராவத், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் ஆணையம் சமூக வலைதளங்களுடன் கூட்டிணைவில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
  • நாட்டில் முற்றிலும் சூரிய ஒளியினால் மின்சாரம் பெறும் ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கொண்ட முதல் மாவட்டமாக சூரத் உருவாகியுள்ளது. சூரத் மாவட்டத்தில் மொத்தம் 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவையனைத்தும் சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தைப் பெறுகின்றன.
  • இளைஞர்கள் வாக்களிப்பதை ஊக்குவிப்பதற்காக வரவிருக்கும் கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கானத் தூதராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் இசையமைப்பாளரும், திரைப்பட இயக்குநருமான யோக்ராஜ் பாத் கர்நாடக தேர்தலுக்கானப் பாடலை இயற்ற உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்