TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 14 , 2021 1321 days 778 0
  • சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் நிறுவனமானது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ளது.
  • வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் சமீபத்தில் அமெரிக்காவை தனது நாட்டின் "மிகப்பெரிய எதிரி" என்று குறிப்பிட்டுள்ளார்.
  • தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக ஹிமா கோலி என்ற நீதிபதி பதவியேற்றுள்ளார்.
  • ஆடை வடிவமைப்பாளரான சத்யா பால் தனது 79 வயதில் காலமானார்.
    • அவர் இந்தியாவில் L’Affaire என்ற சேலைக் கடையின் முதல் பிரிவைத் தொடங்கினார்.
  • பஞ்சாப் மாநிலமானது ஜனவரி மாதத்தை 'தீயன் டி லோஹ்ரி' என்ற திட்டமாக பெண் குழந்தைகளுக்கு அர்ப்பணிக்கிறது.
    • லோஹ்ரி என்பது ஆண்டுதோறும் ஜனவரி 13 ஆம் தேதி கொண்டாடப்படும் வட இந்தியாவின் அறுவடைத் திருவிழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்